தெனாலிராமன் - 1
தெனாலி ராமன் வரலாறு
சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.
சிறுவயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை. சிறுவயதிலேயே விகடமாகப் பேசுவதில் வல்லமைப் பெற்றான். அதனால் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.
காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின், வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான். அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.
தெனாலி ராமனுக்கு காளி மகாதேவியின் அருள் கிடைத்தது எப்படின்னு அடுத்த பதிவுல பார்ப்போமா?

7 comments:
பின்னூட்ட முயற்சி
ஒரு சின்ன திருத்தம்!
தெனாலிராமன் என்பது அவருடைய பெயரே தவிர, தெனாலி என்ற ஊருக்கும்(சென்னையிலிருந்து 400 கி.மீ) அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
kandippa
கருவிப்பட்டையில் + ரேட்டிங் கொடுக்க இயலவில்லை. சரிபார்க்கவும்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கு நன்றி ecr.
http://en.wikipedia.org/wiki/Tenali_Ramakrishna இதை வைத்துதான் இந்த முதல் பதிவிட்டோம். சரியா தவறா என்று இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
சேதுக்கரசி--> Template சரிபண்ணிடறோங்க.
நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்க!
Post a Comment