Jan 19, 2007

தெனாலிராமன் - 1

தெனாலி ராமன் வரலாறு


சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

சிறுவயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை. சிறுவயதிலேயே விகடமாகப் பேசுவதில் வல்லமைப் பெற்றான். அதனால் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.

காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின், வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான். அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.

தெனாலி ராமனுக்கு காளி மகாதேவியின் அருள் கிடைத்தது எப்படின்னு அடுத்த பதிவுல பார்ப்போமா?

Jan 10, 2007

கதைச் சங்கம்

சுட்டி குழந்தைகளுக்கு சின்ன சின்ன கதைகள்.

தூங்க வைக்க, அறிவை வளர்க்க, மகிழ்விக்க சின்ன சின்ன கதைகள், படங்களுடன் (முடிந்தவரை).

கதைகள்

என்னென்ன கதைகள் இங்கே எழுதப்படும்?

ஏற்கனவே எழுதப்பட்டுள்ள தெனாலிராமன், பீர்பால், விக்கிரமாதித்தன் மாதிரியான கதைகள்தாம். சொந்தக் கதைகள் எழுத இப்போது எண்ணமில்லை

வணக்கம்!

குழந்தைகளுக்கான கதைகள் இங்கே சொல்லப்படும்.